ප්රංශයේ ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය
பிரான்சிலுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதரகம்
Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka in France

காவல் துறை சான்றிதழ் (Police Clearance Certificate)
காவல் துறை சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறை
பிரான்ஸ் மற்றும் இத்தூதரகத்தின் இணை அங்கீகாரம் பெற்றுள்ள ஸ்பெயின், போர்ச்சுகல், மொனாக்கோ மற்றும் அன்டோரா ஆகிய நாடுகளில் வசிக்கும், பிறப்பால் அல்லது பதிவு மூலம் இலங்கைப் பிரஜைகளாகிய எவரும், தாங்கள் இலங்கையில் வசித்த காலத்திற்கான காவல் துறை சான்றிதழைப் பெறுவதற்காக பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக விண்ணப்பிக்கலாம்.
தூதரகம், விண்ணப்பத்தை இலங்கை காவல் துறை தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கும்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள், காவல் துறை சான்றிதழுக்கான விண்ணப்பத்தை நேரடியாக இலங்கை காவல்துறை மா அதிபர், காவல்துறை தலைமையகம், கொழும்பு 01, இலங்கை என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லது www.police.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பங்களில், காவல் துறை சான்றிதழ் நேரடியாக விண்ணப்பதாரருக்கே அனுப்பி வைக்கப்படும்.
பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக விண்ணப்பிக்கும் முறை
பிரான்ஸ், பாரிஸிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக காவல் துறை சான்றிதழுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், பின்வரும் இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
1. நேரில் வருகை தந்து விண்ணப்பித்தல் Embassy of Sri Lanka in France16 Rue Spontini,75016 Paris, France
2. தேவையான அனைத்து ஆவணங்களையும் தபால் மூலம் அனுப்புதல் Embassy of Sri Lanka in France16 Rue Spontini,75016 Paris, France
விண்ணப்பிக்கும் முறை மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- பூர்த்தி செய்யப்பட்ட காவல் துறை சான்றிதழ் விண்ணப்பப் படிவம்
- இலங்கை கடவுச்சீட்டின் அசல் மற்றும் தகவல் (Data) பக்கத்தின் நகல்
- குடியிருப்பு அனுமதி (Residence Visa/Permit) அசல் மற்றும் அதன் நகல்
- தேசிய அடையாள அட்டை (NIC) அசல் மற்றும் அதன் நகல் (இருந்தால் மட்டும்)
கட்டணம்
- ஒவ்வொரு காவல் துறை சான்றிதழ் விண்ணப்பத்திற்கும் அரச கட்டணம்: €16
பணம் செலுத்தும் முறை
விண்ணப்பதாரர் தூதரகத்திற்கு நேரில் வரும்பட்சத்தில், பணமாக (Cash) மட்டுமே கட்டணம் செலுத்தலாம்.
குறிப்பு: கடன் அட்டைகள் (Credit Cards), பற்று அட்டைகள் (Debit Cards), தனிப்பட்ட அல்லது நிறுவன காசோலைகள் (Cheques) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
சிறப்பு குறிப்புகள்
- உத்தியோகபூர்வ ரசீது வழங்கப்பட்ட பின்னர், எந்தவொரு சூழ்நிலையிலும் கட்டணம் மீள வழங்கப்படமாட்டாது.
- மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்கள் அசல் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- அனைத்து ஆவண நகல்களும் A4 அளவிலான தாளில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- தூதரகம் ஆவணங்களைச் சான்றளித்த பின்னர் அசல் ஆவணங்களை விண்ணப்பதாரரிடம் திருப்பி வழங்கும்.
விண்ணப்பம் தாமதமடையாமல் இருக்க பின்வருவனவற்றில் கவனம் செலுத்தவும்
- விண்ணப்பதாரரின் பெயர், தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டில் உள்ளவாறு துல்லியமாக குறிப்பிடப்பட வேண்டும்.
- பதிவுகள் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தின் அடிப்படையில் சரிபார்க்கப்படுவதால், இவை சரியாக குறிப்பிடப்படுவது கட்டாயமாகும்.
- அனைத்து ஆவணங்களிலும் தேசிய அடையாள அட்டை இலக்கமும் பிறந்த தேதியும் சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.
- தேசிய அடையாள அட்டையின் தெளிவான நகலைச் சமர்ப்பிப்பது பதிவுகள் சரிபார்ப்பதில் தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்க உதவும்.
- விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் இலங்கையிலுள்ள வசிப்பிட முகவரி துல்லியமாக இருக்க வேண்டும்.
- காவல் துறை சான்றிதழ், இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட அரச குடிவரவு அதிகாரிகளுக்காக மட்டுமே வழங்கப்படும். எனவே, விண்ணப்பப் படிவத்தின் 8 மற்றும் 9 ஆம் பகுதிகளில் தூதரகத்தின் பெயரும் முகவரியும் சரியாக குறிப்பிடப்பட வேண்டும்.
- விண்ணப்பதாரரின் தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தொடர்பு விபரங்களை வழங்குவது மிகவும் அவசியம். மேலதிக விளக்கம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் காவல் துறை சான்றிதழ் பிரிவினர் உங்களைத் தொடர்புகொள்வதற்கு இது உதவும்.
- ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்கள் அல்லது நகலெடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- விண்ணப்பப் படிவத்தில் விண்ணப்பதாரரின் கையொப்பம் கட்டாயமாக இருக்க வேண்டும்.
- தேவையான சந்தர்ப்பங்களில் உங்களை விரைவாகத் தொடர்புகொள்ளும் வகையில், உங்கள் தற்போதைய தொடர்பு விபரங்களை இத்தூதரகத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.