ප්රංශයේ ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය
பிரான்சிலுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதரகம்
Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka in France

அதிகாரப் பத்திரம் / சத்தியப் பிரமாணப் பத்திரம்
(Power of Attorney / Sworn Affidavit)
தகுதி:
பிரான்ஸ் மற்றும் இத்தூதரகத்தின் இணை அங்கீகாரம் பெற்றுள்ள ஸ்பெயின், போர்ச்சுகல், மொனாக்கோ மற்றும் அன்டோரா ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகள்.
இந்த சான்றளிப்பு சேவைக்கு விண்ணப்பிக்க பின்வரும் இரண்டு முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
1. தூதரகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பித்தல் இலங்கைத் தூதரகம், பிரான்ஸ்16 Rue Spontini,75016 Paris, France
2. தேவையான அனைத்து ஆவணங்களையும் தபால் மூலம் அனுப்புதல் Embassy of Sri Lanka in France, 16 Rue Spontini, 75016 Paris.
செல்லுபடியாகும் இலங்கை கடவுச்சீட்டு மற்றும் செல்லுபடியாகும் குடியேற்ற விசா (Immigrant Visa) கொண்ட இலங்கைப் பிரஜைகள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்ற இலங்கைப் பிரஜைகள், பிரான்ஸ் பாரிஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கொன்சுலர் அதிகாரி முன்னிலையில் பின்வரும் ஆவணங்களில் கையொப்பமிட தகுதியுடையவர்கள்:
- அதிகாரப் பத்திரம் (Power of Attorney)
- சத்தியப் பிரமாணப் பத்திரம் (Affidavit)
- எதிர் கையொப்பமிட வேண்டிய ஆவணங்கள்
- சம்மதக் கடிதங்கள் (Consent Letters)
எதிர் கையொப்பம் மற்றும் சத்தியப் பிரமாணப் பத்திரம்
(Countersign and Affidavit)
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
- விண்ணப்பதாரரின் விபரப் படிவம்
- விண்ணப்பதாரரின் கையொப்பம் உறுதிப்படுத்தப்பட வேண்டிய ஆவணம்
- செல்லுபடியாகும் இலங்கை கடவுச்சீட்டின் அசல் மற்றும் அதன் நகல்
- செல்லுபடியாகும் குடியேற்ற விசாவின் அசல் மற்றும் அதன் நகல்
விண்ணப்பதாரர் இரட்டைக் குடியுரிமை பெற்றவராக இருந்தால்:
- அசல் இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டுஅல்லது
- விண்ணப்பதாரர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை கடவுச்சீட்டு மற்றும் அதன் நகல்
அரசாங்க கட்டணம்: ஒவ்வொரு ஆவணத்திற்கும் €64
அதிகாரப் பத்திரம் (Power of Attorney)
தேவையான ஆவணங்கள்:
- விண்ணப்பதாரரின் விவரப் படிவம் .
- விண்ணப்பதாரரின் கையொப்பம் சான்றளிக்கப்பட வேண்டிய அதிகாரப்பத்திரம் (Power of Attorney) (சட்டப்பூர்வ வடிவத்தில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்).
- விண்ணப்பதாரரின் செல்லுபடியாகும் இலங்கை கடவுச்சீட்டின் (Passport) அசல் மற்றும் அதன் நகல்.
- விண்ணப்பதாரரின் செல்லுபடியாகும் குடியேற்ற விசாவின் (Immigrant Visa) அசல் மற்றும் அதன் நகல்.
- விண்ணப்பதாரர் இரட்டைக் குடியுரிமை (Dual Citizenship) பெற்றவராக இருந்தால்:அசல் இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ் (Dual Citizenship Certificate) மற்றும் அதன் நகல், அல்லதுவெளிநாட்டு கடவுச்சீட்டு அல்லது இரட்டைக் குடியுரிமை பெற்றவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை கடவுச்சீட்டு மற்றும் அதன் நகல்.
- அசல் இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ் (Dual Citizenship Certificate) மற்றும் அதன் நகல், அல்லது
- வெளிநாட்டு கடவுச்சீட்டு அல்லது இரட்டைக் குடியுரிமை பெற்றவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை கடவுச்சீட்டு மற்றும் அதன் நகல்.
- செல்லுபடியாகும் இலங்கை கடவுச்சீட்டு, குடியேற்ற விசா அல்லது இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ் கொண்ட இரண்டு சாட்சியாளர்கள் (அவர்களின் ஆவணங்களின் அசல் மற்றும் நகல்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்).
அரசாங்கக் கட்டணம்
- ஒவ்வொரு ஆவணத்திற்கும் €64
குறிப்பு:இலங்கையில் உள்ள உங்கள் சட்டத்தரணியிடம், எத்தனை Power of Attorney பிரதிகள் தேவை என்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆவணத்திற்கும் தனித்தனியாக கட்டணம் அறவிடப்படும்.
சம்மதக் கடிதம் (Consent Letter)
தேவையான ஆவணங்கள்:
- விண்ணப்பதாரரின் விவரப் படிவம்.
- சம்மதக் கடித விண்ணப்பப் படிவம் (Consent Letter Form).
- குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் அசல் மற்றும் அதன் நகல்.
- தாய் அல்லது தந்தையின் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் விசா மற்றும் அவற்றின் நகல்கள்.
அரசாங்கக் கட்டணம்
- ஒவ்வொரு ஆவணத்திற்கும் €64
அதிகாரப்பத்திரம், சத்தியப்பிரமாணம் மற்றும் பிற ஆவணங்களின் கையொப்பச் சான்றளிப்பு
இலங்கையர் அல்லாதவர்கள் அல்லது அகதி (Refugee) விசா வைத்திருப்பவர்களுக்கு:
- அதிகாரப்பத்திரம் (Power of Attorney), சத்தியப்பிரமாணம் (Affidavit) மற்றும் கையொப்பம் சான்றளிக்கப்பட வேண்டிய பிற ஆவணங்கள் அனைத்தும் நோட்டரி (Notary) அல்லது சட்டத்தரணி (Lawyer) முன்னிலையில் கையொப்பமிடப்பட வேண்டும்.
- அதன் பின்னர், அந்த ஆவணங்கள் சம்பந்தப்பட்ட நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் அல்லது அதற்குரிய அரசுத் துறையால் சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட (Legalize) வேண்டும்.
- அதன் பின்னரே அவை சான்றளிப்பதற்காக பாரிஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கட்டணம் செலுத்தும் முறை
விண்ணப்பதாரர் நேரில் தூதரகத்திற்கு வந்து விண்ணப்பித்தால், பணமாக (Cash) கட்டணம் செலுத்தலாம்.
பின்வருவன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது:
- கடன் அட்டைகள் (Credit Cards)
- பற்று அட்டைகள் (Debit Cards)
- தனிப்பட்ட காசோலைகள்
- நிறுவனக் காசோலைகள்
முக்கிய குறிப்புகள்
- நேர்முகச் சந்திப்பிற்கு (Appointment) முன்பதிவு செய்யும்போது, விண்ணப்பதாரர் தனது குடியுரிமை நிலையை சரியாக அறிவிக்க வேண்டும்.
- அதன்படி, தூதரக அதிகாரி அல்லது வரவேற்பு அதிகாரி (Receptionist) பின்பற்ற வேண்டிய சரியான நடைமுறையை அறிவிப்பார்.
- முழுமையற்ற விண்ணப்பங்கள் அல்லது தேவையான ஆவணங்கள் இல்லாத விண்ணப்பங்கள் செயல்முறையில் தாமதத்தை ஏற்படுத்தலாம்.
- மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்கள் அசல் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- அனைத்து நகல்களும் A4 அளவிலான காகிதத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- தபால் மூலம் அனுப்பப்படும் ஆவணங்கள் தொலைந்து போதல் அல்லது தாமதமடைவதற்கு பாரிஸிலுள்ள இலங்கைத் தூதரகம் எந்தப் பொறுப்பையும் ஏற்காது.
- தேவைப்பட்டால், கூரியர் சேவையை விண்ணப்பதாரரே ஏற்பாடு செய்ய வேண்டும்.
- ரசீது வழங்கப்பட்ட பிறகு செலுத்தப்பட்ட கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பி வழங்கப்படமாட்டாது.
- தனிப்பட்ட மற்றும் நிறுவனக் காசோலைகள் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.