ප්රංශයේ ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ තානාපති කාර්යාලය
பிரான்சிலுள்ள இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தூதரகம்
Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka in France

சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல்
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
- முறையாக பூர்த்தி செய்யப்பட்ட MTA 30/2 விண்ணப்பப் படிவம்.
- மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தற்போதைய சாரதி அனுமதிப்பத்திரம்.
- சம்பந்தப்பட்ட நாட்டில் வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழ் மற்றும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு.
- செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் சான்றளிக்கப்பட்ட நகல்.
- செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி / விசாவின் சான்றளிக்கப்பட்ட நகல்.
- தேசிய அடையாள அட்டையின் (NIC) சான்றளிக்கப்பட்ட நகல். (கடவுச்சீட்டில் தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்பட்டிருந்தால், தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிப்பது கட்டாயமல்ல.)
- கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் எடுக்கப்பட்ட கடவுச்சீட்டு அளவிலான இரண்டு (02) புகைப்படங்கள்.
- இலங்கைத் தூதரகத்திற்கு செலுத்தப்பட்ட கட்டண ரசீதின் சான்றளிக்கப்பட்ட நகல் (€100 + ஒவ்வொரு ஆவணத்திற்கும் சான்றளிப்பு கட்டணமாக €12).
- தாமதக் கட்டணம்: தாமதமான ஒவ்வொரு ஆண்டிற்கும் €10.